[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்... அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை

toilet-cleaned-by-school-students

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள அந்த பள்ளியில் மாணவர்கள், கழிவறையை சுத்தம் செய்த காட்சியை, அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, புதிய தலைமுறைக்கு அனுப்பியுள்ளார். மாணவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டம் இருப்பினும், அதை மீறுவதுபோல் அமைந்திருக்கும் இந்த சம்பவம் குறித்த காட்சிகளை புதிய தலைமுறை வெளியிட்டது. இதனையடுத்து, தம்மை பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக, முன்னாள் மாணவர் கூறியுள்ளார். இதனிடையே, இவரது குற்றச்சாட்டையும், மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் சம்பவத்தையும், பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close