[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் சத்யராஜ்...

actor-sathiyaraj-meet-to-karunanidhi

திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனை வந்தார் நடிகர் சத்யராஜ்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் திங்கட்கிழமைக்குள் கருணாநிதி நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் முன்பைவிட தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கனிமொழி தம்மிடம் தெரிவித்ததாக சத்யராஜ் கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனர்.

கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் கழகத் தோழர்களும், நண்பர்களும் நேரில் சந்திக்க வர வேண்டாம் என அக்கட்சித் தலைமைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close