[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

சென்னையில் மின் இணைப்பு துண்டிப்பு பகுதிகளில் தொலைபேசி அழைப்பில் குடிநீர் விநியோகம்..!

drinking-water-supplies-through-calling-in-chennai

சென்னையில் வர்தா புயலால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் தொலைபேசி மூலம் அழைத்தால் குடிநீர் விநியோகம் செய்யப்படுமென சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் குடிநீர் வாரியத்தை தொடர்பு கொண்டு குடிநீர் பெறுவது எப்படி என்பதைப் தெரிந்து கொள்வோம்..

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் தொலைபேசி அழைப்பின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் சென்னை குடிநீர் வாரியத்தை தொடர்புகொண்டு தங்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ளலாம். 6000 லிட்டர் குடிநீருக்கு 400 ரூபாய் எனவும் 9000 லிட்டர் குடிநீருக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுமென குடிநீர் வாரியும் தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர் - 2599 1908, மணலி - 2555 3090, மாதவரம் - 2553 0100, தண்டையார்பேட்டை - 2592 0609, ராயபுரம் - 2590 2651, திரு.வி.க.நகர் - 2650 5435, அம்பத்தூர் - 2653 0929, அண்ணா நகர் - 2644 1679, தேனாம்பேட்டை - 2834 1448, கோடம்பாக்கம் - 2815 3803, வளசரவாக்கம் - 2486 6419, ஆலந்தூர் - 2224 1315, அடையாறு - 2235 1145, பெருங்குடி - 2258 4288, சோழிங்கநல்லூர் - 2450 1695.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close