[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

ரயில் போக்குவரத்து இயல்பு நிலை திரும்பியது... தெற்கு ரயில்வே அறிவிப்பு

train-status-was-returned-to-normal-level

வர்தா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையின் போது பெற்ற படிப்பினையால் தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருந்ததால் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவில் சரி செய்ய முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 6 லட்சம் ரூபாய் வருவாய்த் தரக்கூடிய 62 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் புறநகர் ரயில் சேவைகளைப் பொறுத்தவரையில் கடந்த 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 11 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close