[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சேலம்: செயற்கை முட்டை பீதி... கிடங்குகளில் அதிகாரிகள் ஆய்வு

salem-artificial-egg-panic-the-authorities-inspected-warehouses

சேலம் மாவட்டத்தில் செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்ததை அடுத்து, முட்டை கிடங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலத்தில் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள கடைகளில், செயற்கை முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடையே தகவல் பரவியது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வாங்கி வைத்திருந்த முட்டைகளை சாலையில் போட்டு உடைத்தனர். பின்னர் முட்டையின் உள்புறம் உள்ள அடுக்கில் பாலிதீன் பொருள் போன்ற படிமம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றதையடுத்து குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முட்டை கிடங்குகளில் டாக்டர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் சிலவற்றை உடைத்தும், மேலும் சில முட்டைகளை வேக வைத்தும் சோதனை செய்தனர். இந்த ஆய்வில் முட்டையின் ஓடு மற்றும் வெள்ளை கருவுக்கு இடையே இயல்பாகவே பாலிதீன் போன்ற அமைப்பு உள்ளது என்றும், செயற்கையான முட்டைகள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close