[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோர வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

need-to-request-additional-funds-from-the-federal-government-stalin

மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கூடுதல் நிதியை நிவாரணமாகக் கேட்டுப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். எழும்பூர், ஓட்டேரி பகுதிகளில் ஆய்வு செய்த அவர், அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வர்தா புயல் தாக்கிய 72 மணிநேரத்திற்குப் பின்னரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை என்றார். மாநில அரசும், மாநகராட்சியும் விரைந்து செயல்பட்டு இயல்புநிலையை கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் எனவும் ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close