[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி...

chief-financial-assistance-to-the-families-affected-by-the-vardha-cyclone

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 43 குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி உதவி வழங்கினார்.

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, உதயகுமார், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வர்தா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் மற்றும் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்குச் சென்ற முதலமைச்சர் அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் சென்ற அவர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளான 43 குடும்பங்களுக்கு 13 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும், புயலால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், கால்நடைகளை இழந்த 3 குடும்பங்களுக்கு தலா 38 ஆயிரம் ரூபாயும், வீடுகளை இழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close