[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் தொடங்கியது

electricity-supply-in-some-parts-of-chennai

வர்தா புயலால் சென்னையில் சாய்ந்துள்ள மரங்கள், மின்கம்பங்களைச் சரிசெய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதனால் ஒரு சில இடங்களில் மின் விநியோகம் தொடங்கியுள்ளது.

வர்தா புயல் காரணமாக சென்னையில் சாய்ந்துள்ள பத்தாயிரம் மின்கம்பங்கள், சேதமடைந்துள்ள 450 மின்மாற்றிகளை சரிசெய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் சென்னையின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் சீரடைந்துள்ளது. குறிப்பாக சென்னை ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, கோடம்பாக்கம், அசோக்நகர், ராமசாமி சாலை, பி.டி.ராஜன் சாலை, ஆவடியின் சில பகுதிகளிலும் மயிலாப்பூர், ராயப்பேட்டை, அபிராமபுரம், எம்.ஆர்.சி நகர், மந்தைவெளியின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் சீரடைந்துள்ளது.

இதே போல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கருகம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், பெசன்ட் நகர், அம்பத்தூர், அண்ணாநகரின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close