[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பிரதமருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம்: ரூ.1000 கோடி நிதி உதவி தர வேண்டுகோள்

paneerselvam-letter-to-the-prime-minister-to-give-financial-assistance-of-rs-1000-crore

வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க, மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

இ‌துகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்ததுடன், 800 டிரான்ஸ்பார்மர்களும் பழுதடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிசைப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள‌தாகவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்‌‌கள் அல்லல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

புயல் சேதத்தை மதிப்பிட மத்திய அரசு ஒரு குழுவை அனுப்புவதுடன், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியும் செய்ய வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். ‌‌வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவான‌ மனுவை ஒரு சில நாட்களில்‌ வழங்குவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் உடனடியாக நிதியுதவி வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ‌‌

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close