[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மிரட்டும் வர்தா புயல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே வர வேண்டாம்..!

vardah-strom-people-do-not-come-out-until-the-official-announcement

வர்தா புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புயல் மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில், சென்னை எழிலகத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், வர்தா புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாகக் தெரிவித்தார்.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் , பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், புயல் கரையைக் கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close