[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

dmk-chief-karunanidhi-returned-home-after-treatment

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கருணாநிதிக்கு அவர் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் ஒவ்வாமை ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதமாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார். நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதால் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கருணாநிதி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று திரும்பினார். இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், முழு ஓய்வில் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close