[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

சோ ராமசாமி மறைவிற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

leaders-speech-about-cho-ramasamy

துக்ளக் இதழின் ஆசிரியரும், மூத்த நடிகருமான சோ ராமசாமி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கையில், ‘துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த நாள் முதல் தமிழக அரசியலில் ஒரு தூய்மையான நிலையை உருவாக்க வேண்டும் என்றும், இந்திய அரசியலில் தமிழக அரசியலும் கலந்து இருக்க வேண்டும் என்றும் உயர்ந்த சிந்தனைகளோடு மிக ஆழமாக சிந்தித்து செயல்பட்டவர் சோ என்று கூறியுள்ளார்.

நாட்டில் அவசரக் காலம் ஏற்படுத்தப்பட்ட சமயத்திலும், மற்ற காலக் கட்டத்திலும் தனது கருத்துக்களை மிக ஆழமாக எடுத்துவைத்து, நாட்டினுடைய முன்னேற்றம் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தித்தவர் என்றும் கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, தனது பத்திரிகை எழுத்துக்களின் மூலம் தமிழக அரசியலின் தலையெழுத்தையே பல நேரம் மாற்றியவர் சோ ராமசாமி என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடும் அளவிற்கு, துக்ளக் விழாவையும் அந்தக் காலத்தில் நடத்திக் காட்டியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இல.கணேசன்

பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி இல.கணேசன் பேசுகையில், சோ ராமசாமி அவர்கள் நாடகத் துறையிலும், திரைப்படத்துறையிலும் தனது முத்திரையை பதித்திருந்தாலும் துக்ளக் இதழின் ஆசிரியர் என்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் என்று கூறியுள்ளார். மேலும் தான் ஏற்றுக்கொண்ட கருத்து சரி என்று பட்டால், தயங்காமல் துணிச்சலாக எழுதக்கூடிய தன்மை அவரிடம் இருந்தது என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், சோ அவர்கள் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒரு அரசியல்வாதியாக இருந்தார் என்றும் அவர் சொல்கிற கருத்துக்கள் ஆழமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அவருடைய இரங்கலுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close