[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

அரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

delhi-cm-aravind-kejriwal-pays-tribute-to-jayalalithaa

அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியிருந்து விமானம் மூலம், சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமான அரசியல் தலைவரான ஜெயலலிதா ஏழைகளுக்காக பாடுபட்டவர் என குறிப்பிட்டார். மேலும், அரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் புகழாரம் சூட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close