[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஆறுதல் கூறிய பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

pm-modi-pays-tribute-to-jayalalithaa

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலாவிடம் ஆறுதல் கூறியபோது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

பிரதமர் மோடி டெல்லியிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலாவை நோக்கிச் சென்ற மோடி கண்ணீர் விட்டு அழுத அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர் அருகில் சென்றபோது, கட்டி தழுவி ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி ஆறுதல் கூறிய போது முதலமைச்சர் பன்னீர்செல்வமும், சசிகலாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.

ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close