[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

முதல்வர் உடல்நலம் குறித்து அப்போலோ புதிய அறிக்கை வெளியீடு

apollo-released-jayalalitha-health-reports

முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இதயயியல் மற்றும் சுவாசயியல் நிபுணர்கள் முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள மருத்துவமனை செய்திக்குறிப்பில் முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும். அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எக்மோ கருவியின் மூலம் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்.முதலமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான உள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close