முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை இதுவரை வெளியிட்ட அறிக்கைகளின் விபரம் பின்வருமாறு:
23.09.2016
முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அப்போலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
24.09.2016
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவர் வழக்கமான உணவை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது
25.09.2016
முதலமைச்சருக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், வழக்கமாக உட்கொள்ளும் உணவை உட்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் செய்தி அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் மருத்துவமனை தெரிவித்தது. சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல்கள் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முதமைச்சருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க தேவையில்லை என்றும், சிகிச்சைக்கு அவர் போதிய அளவுக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
29.09.2016
முதலமைச்சருக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
3.10.2016
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனை தந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
6.10.2016
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக்குழுவினர் 3 பேர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தக்குழு அக்டோபர் 7-ஆம் தேதி வரை சென்னையில் தங்கி முதலமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே செப்டம்பர் 30-ந்தேதி சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வந்து முதல்வரின் உடல்நிலையை சோதித்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
10.10.2016
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்லானி மீண்டும் சென்னை வந்து இரண்டு நாட்கள் முதலமைச்சரின் உடல்நிலையை கண்காணித்ததோடு, அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
21.10.2016
மூத்த இதயசிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் சிகிக்சை நிபுணர்கள், நீரிழிவு சிகிச்சை நிபுணர்கள் முதலமைச்சருக்கு சிகிச்சையளித்து அவரது உடல்நலன் குறித்து கண்காணித்தாக அப்போலோ மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது. அப்போது முதலமைச்சர் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
04.12.2016
முதலமைச்சருக்கு ஞாயிறு மாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதயநோய் சிகிக்சை நிபுணர்களும், சுவாசவியல் நிபுணர்களும் சிகிச்சை அளித்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ அறிக்கைகள் இதுவரை.
23.09.16 - காய்ச்சல்,நீர்ச்சத்து குறைபாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் உடல் நிலை சீரானது
24.09.16 - முதலமைச்சர் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும், உணவை உட்கொண்டதாக தகவல்
25.09.16 - காய்ச்சல் குறைந்துள்ளது, வழக்கமான உணவை உட்கொண்டார்
29.09.16 - மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு கூறப்பட்டது
3.10.2016 - முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனை தந்ததாக தகவல்
6.10.2016
எய்ம்ஸ் குழுவினர் 3 பேர் நேரில் வந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.எய்ம்ஸ் மருத்துவக்குழு அக்.7 வரை சென்னையில் தங்கி கண்காணித்தனர்.லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வந்தார்
10.10.2016
எய்ம்ஸ் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி - அப்போலோ குழுவுடன் ஆலோசனை
21.10.2016
மூத்த இதயசிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நிபுணர்கள் முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்தனர்
04.12.2016
முதலமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கை
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்