[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

திருச்சி வெடிப்பொருள் தொழிற்சாலையில் மழையால் மீட்புப் பணிகள் தாமதம்.. ஆட்சியர் தகவல்

rescue-operation-slow-in-trichy-factory-fire-accident

மழை பெய்து வருவதால் முருங்கப்பட்டி வெடிப்பொருள் தொழிற்சாலையில் மீட்பு பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து

திருச்சி துறையூரை அடுத்த முருங்கப்பட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் வெடிமருந்து தொழிற்சாலையில் வெவ்வேறு வெடிப்பொருட்கள் தயாரிப்பதற்காக 7 யூனிட்டுகள் உள்ளன.

பாறைகள், நிலக்கரி போன்றவற்றை வெட்டி எடுப்பதற்காக சிலரி என்ற ரசாயனத்தை பயன்படுத்தி இந்த தொழிற்சாலையில் ஜெல் போன்ற வெடிபொருள் தயார் செய்யப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிற்சாலையின் ஒரு யூனிட்டில் 20 பேர் வெடிப்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடி‌விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், பணியிலிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். 6 தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிவிபத்து நடந்தபோது பணியில் இருந்தவர்கள் யாரும் இதுவரை மீட்கப்படவில்லை என தெரிகிறது.

மீட்புப் பணி தாமதம்

இந்நிலையில், மழை பெய்து வருவதால் முருங்கப்பட்டி வெடிப்பொருள் தொழிற்சாலையில் மீட்புப்பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விட்டுவிட்டு மழை பெய்வதாலும், சிலரி ரசாயனம் காற்றில் கலந்து ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தாலும் விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் மீட்புப்படையினரால் முழுமையாக செல்லமுடியவில்லை.

இதனிடையே, மீண்டும் வெடி விபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலவுகிறது. மேலும், சிலரி ரசாயனத்தால் காற்றில் மாசு ஏற்பட்டு, சுற்றுப்புற கிராமங்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close