[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

'நான் தற்போது அரசியலை விட்டே விலகியிருக்கிறேன்'.. மு.க.அழகிரி பரபரப்பு

i-am-not-in-the-politics-say-mk-alagiri

முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி, தான் இப்போது அரசியலை விட்டு விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அக்கட்சியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் கருணாநிதிக்கு ஒவ்வாமை காரணமாக உடல்நிலைக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து மு.க.அழகிரி நேரில் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, தமிழகத்தில் 3 தொகுதி தேர்தல்களில் திமுக சந்தித்த தோல்விக்கு திமுக தலைவர் ‌கருணாநிதி பரப்புரை மேற்கொள்ளாததே காரணம் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், தான் இப்போது அரசியலை விட்டு விலகியிருப்பதால், நடந்து முடிந்த 3 தொகுதிகள் தேர்தல் குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close