[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

மத்திய அரசைக்கண்டித்து திமுக இன்று மனித சங்கிலி போராட்டம்

currency-note-issue-today-dmk-protest-in-tamilnadu

ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

செல்லா நோட்டு அறிவிப்பால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று (நவ.24) மாலை 4 மணி முதல் 5 மணி வரை தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. சென்னையில் அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரை திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக சாலையின் ஒரு பகுதியில் அவர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவின் பல்வேறு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறயுள்ளது.

இந்த நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடுமுழுவதும் வரும் 28 ஆம் தேதி போராட்டம் நடத்தபோவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி தமிழகத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி திமுக சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close