[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

குற்றாலத்தில் குறிப்பிட்ட தொலைவிற்குள் சோப்பு, சீயக்காய் விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை

use-of-soap-plastics-oil-in-kuttralam-falls-is-banned

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் எண்ணெய், சோப்பு, சீயக்காய் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

குற்றாலத்தின் எழிலைப் பாதுகாக்க அருவிப் பகுதியில் எண்ணெய், சோப்பு, சீயக்காய் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து காசிமாஜோர்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடையை நீக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் அருவி பகுதியில் குறிப்பிட்ட தொலைவிற்குள் சோப்பு, சீயக்காய், எண்ணெய், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்தனர். அந்த குறிப்பிட்ட தொலைவை நெல்லை மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் நிர்ணயம் செய்வார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தி அது தொடர்பான அறிக்கையை 6 மாத காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் குற்றால வனப் பகுதிகளுக்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வன அலுவலர்களின் அனுமதி பெற்று வனப் பகுதிக்குள் செல்லலாம் என்றும் கண்காணிப்பு கருவிகள், மது அருந்தியிருப்பதை சோதனை செய்யும் கருவிகளின் எண்ணிக்கை, காவல்நிலைய விரிவாக்கம், மொபைல் கோர்ட் உள்ளிட்டவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்களை செய்யவும் அவர்களுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close