[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை

chennai-high-court-lawyer-association-election-today-vote-counting

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், இன்று எண்ணப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் உள்பட 16 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்காக 6 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் வரிசையில் நின்று ஆர்வமுடன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாக்களித்தனர். ஏராளமனோர் மாலை வேளையில் திரண்டதால், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது. பின்மாலை பொழுதுவரை நீடித்த வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 4,838 வாக்குகளில், 3,784 வாக்குகள் பதிவாகின.

இதுதொடர்பாக பேசிய தேர்தல் நடத்தும் அலுவலரும், மூத்த வழக்கறிஞருமான செல்லைய்யா, நேற்றைய தேர்தலில், 79.21 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close