[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

தமிழகத்தையும் விட்டுவைக்காத உப்பு தட்டுப்பாடு வதந்தி... கிலோ ரூ.400-க்கு விற்பனை?

salt-rumour-being-circulated-in-mettur

சேலம் மாவட்டம் மேட்டூரில் தட்டுப்பாடு காரணமாக உப்பு கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது.

இதனால் பொதுமக்கள் அவசர அவரசமாக கடைகளுக்குச் சென்று உப்பை வாங்கத் தொடங்கினர். இதையடுத்து, அங்குள்ள கடைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இது வதந்திதான் என்றும், பொதுமக்கள் எவரும் நம்பத்தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், வதந்தியை பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து வதந்தி பரவிய மேட்டூர் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் உப்பு தட்டுப்பாடு இல்லை என்று வருவாய்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் உப்பு தட்டுபாடு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. அம்மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு கிலோ உப்பு ரூ.400-க்கும் அதிகமாக விற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. சில கடைகளில் உப்பு மூடைகள் திருடப்பட்டதாகவும் இணையத்தில் நெட்டிசன்கள் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர். உத்தரப்பிரதேசத்தின் எந்த பகுதியிலும் உப்பு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விளக்கமளித்தார். அதற்கெல்லாம் ஒருபடி மேலேசென்று, வடக்கு டெல்லி பகுதியில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close