[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

வைகோவின் முரண்பட்ட கருத்து... மக்கள் நலக் கூட்டணியில் முற்றும் மோதல்

clash-in-people-welfare-alliance

சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கூட்டணிக்கு இழுத்ததில் வெற்றி பெற்றதாக பெருமைப்பட்டுக் கொண்ட வைகோ, தற்போது, அந்த முடிவு குறித்து சுயவிமர்சனம் செய்திருக்கிறார். அன்று மக்கள்நலக் கூட்டணியின் சாதனையாகப் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வே, இன்று அக்கூட்டணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் அமைதியாக இருந்த மக்கள்நலக் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட வித்திட்டது, திமுகவின் அனைத்துக் கட்சி கூட்ட அழைப்பு. திமுகவின் கூட்டத்தில் பங்கேற்க தேவையில்லை என வைகோவும் இடதுசாரிகளும் முடிவெடுக்க, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் திருமாவளவன். இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால், காவிரி தொடர்பான திமுக-வின் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை அவர் எடுக்க நேர்ந்தது.

இந்த சலசலப்பு அடங்குவதற்குள், ‘தேர்தல்தான் முடிந்துவிட்டதே, இனி ஒருங்கிணைப்பாளர் பதவி எதற்கு என வைகோவுக்கு எதிராக குரல் கொடுத்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். ஆனால், மக்கள்நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக வைகோ நீடிப்பதாக திருமாவளவன் கூறினார். கூட்டணிக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர் என வைகோவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், 3 தொகுதி தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவில்லை என வைகோ கூற, தேமுதிக ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம் என கூறியுள்ளன இடதுசாரிக் கட்சிகள்.

இப்படி கருத்துவேறுபாடு நாளுக்குநாள் முற்றிய சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது தவறுதான் என வார இதழுக்கு பேட்டியளித்தார் வைகோ. அதேநேரத்தில், முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தியதில் தவறில்லை என்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இவையெல்லாம், வைகோவின் அரசியல் நிலைப்பாட்டையே கேள்விக்குரியதாக்கியுள்ளது. வைகோவின் இந்த முரண்பட்ட நிலைபாட்டை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்.

திமுக, அதிமுகவுக்கு மாற்று எனக் கூறி உருவான மக்கள்நலக் கூட்டணியின் தலைவர்களிடையே அதிகரித்துவரும் கருத்துவேறுபாடுகள், முன்னுக்குப் பின் முரணான பேச்சுகள், அக்கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close