[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல்...... இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு

election-nominations-today-completed

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள். அதனைத்தொடர்ந்து அன்று மாலை வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் 19ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close