[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ஜெயலலிதா பீனிக்ஸ் பறவையைப் போல திரும்பி வருவார்..நடிகை நமீதா

jayalalithaa-like-a-phoenix-bird-say-actress-namitha

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நடிகை நமீதா இன்று வருகை புரிந்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்த அவர், பீனிக்ஸ் பறவைப்போல முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பி வருவார் என்று கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 35 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உள்ள அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மருத்துவனை சென்று அவரின் உடல்நிலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-வில் இணைந்த நடிகை நமீதா இன்று அப்போலோ மருத்துவனை சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமீதா, முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி திரும்பி வருவார் என குறிப்பிட்டார். மேலும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் திரும்பி வந்து மக்கள் பணி ஆற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் நமீதா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close