[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

மூன்று தொகுதி தேர்தலில் போட்டியில்லை....மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

the-marxist-communist-inform-contesting-the-election

தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதித் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்நலக் கூட்டணிக் கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும், அதிமுக, திமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்ற அடிப்படையிலும் இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக் கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close