[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நெல்லை அருகே நாட்டு மருந்து உட்கொண்ட வைத்தியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

doctor-of-medicine-involving-the-deaths-of-the-three-deaths

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நாட்டுமருந்து உட்கொண்ட நாட்டு வைத்தியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் அழகப்பபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்துப்பாண்டி என்ற நாட்டு வைத்தியர் வந்துள்ளார். ஊர் மக்களிடம் தன்னை நாட்டுவைத்தியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், மூலிகை மருந்துகளையும் கொடுத்துள்ளார்.

இதனிடையே, சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்க்கு தானாகவே, மருந்து தயாரித்த வைத்தியர் முத்துப்பாண்டி, அதனை தானும் உட்கொண்டதோடு மட்டுமில்லாமல் மற்ற 3 பேருக்கும் அளித்துள்ளார். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட, வைத்தியர் முத்துப்பாண்டி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதேபோல் முத்துப்பாண்டி தயாரித்து அளித்த நாட்டு மருந்தை உட்கொண்ட பாலசுப்ரமணியன், இருளாண்டி ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமிநாதன் என்பவர் பாளையம்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close