தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரிடம் காங்கிரஸ் தலைமை தனித்தனியாக விளக்கம் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
காவிரி பிரச்சனைக்காக திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்கவில்லை. அன்றைய நாளில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் திருநாவுக்கரசர் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தனித்தனியாக விளக்கம் கேட்டுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போரட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொள்ளாதது குறித்தும், திமுகவுடன் கூட்டணி முரண்பாடுகளை தெரிவித்தமைக்காக திருநாவுக்கரசரிடமும் டெல்லி காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனிடமும் தனியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக சார்பிலும் திருநாவுக்கரசர் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எந்தவித புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. எனவே அவருக்கு இனி புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, திருநாவுக்கரசரிடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு கேட்டபோது, உட்கட்சி பூசல் எதுவும் இல்லை என்றும் நண்பருக்கு புதிய பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!
வங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து