JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
தமிழ்நாடு 18 Oct, 2016 05:05 PM

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்... பழைய வேட்பாளர்களுக்கு தடையில்லை

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட பழைய வேட்பாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் இதுவரை தடை விதிக்கவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வாக்களர்களுக்கு அதிக பணம், பரிசுபொருட்கள் கொடுத்த குற்றச்சாட்டு மற்றும் வேட்பாளர்கள் வீடுகளில் கணக்கில் வராத பணம் பறிமுதல் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. மேலும், திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ., வான சீனிவேல் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனால் மூன்று தொகுதிகள் காலியாகின. இந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதுதொடர்பாக பேசிய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட பழைய வேட்பாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் இதுவரை தடை விதிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இந்த இரு தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றத்தில் தற்போது பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் 3 ஆம் தேதி பொது மற்றும் செலவினப் பார்வையாளர்கள் 6 பேர் வர இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் 3 தொகுதிகளில் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அது பொருந்தாது என அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads