[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

அரசியல் லாபத்திற்காகவே ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் சந்தித்தார்: சீமான் குற்றச்சாட்டு

seeman-accusation-on-dmk

காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காகவே அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளித்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 14- ஆம் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது விவசாயப் பிரதிநிதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல்களை அவரிடம் ஸ்டாலின் அளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2007- ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல கோரிக்கைகள் எழுந்தது. அப்போது ஒன்பது ஆண்டுகள் கூட்டணியில் இருந்த திமுக இதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும், மக்கள் மத்தியில் தற்போது காவிரி பிரச்சனை மேலோங்கி இருப்பதாலும், அரசியல் எழுச்சியை ஏற்படுத்துவதாலும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் சந்தித்து பேசினார். இவை அனைத்துமே வெறும் நாடகம் எனவும் சீமான் குறை கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close