[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

guindy-accident-human-rights-commission-notice-to-tn

கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை கிண்டியில் நேற்று தண்ணீர் லாரி மோதி செல்லம்மாள் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் காயத்ரி, சித்ரா, ஆயிஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தண்ணீர் லாரியின் பிரேக் பிடிக்காததாலேயே இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சப்பவம் தொடர்பாக 4 வாரத்தில் காவல்துறை தலைவர், தலைமைச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பேசிய குடிநீர் வாரிய மேலாண் இயக்கநர் விக்ரம் கபூர், விபத்து ஏற்படுத்திய லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அதிகாரிகளையும், ஒப்பந்த லாரி உரிமையாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close