[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

காவிரி உயர்மட்டக் குழு ஆய்வறிக்கை வரும் 17-ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

central-team-to-file-their-report-on-oct-17th-over-cauvery-basin-inspection

காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 17-ல் தாக்கல் செய்யப்படும் என்று குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வை முடித்துக் கொண்டு சேலம் வந்த 14 பேர் கொண்ட அந்தக் குழுவினர் இன்று காலை மேட்டூர் அணையில் ஆய்வை மேற்கொண்டனர். அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்த் தேவை ஆகியவை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள், விளைவிக்கப்படும் பயிர்கள், விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதனையடுத்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் உயர் தொழில்நுட்பக் குழுவினர், பவானி அணையையும் ஆய்வு செய்ய உள்ளனர். பவானி அணையில் ஆய்வு நடத்திய பின்னர் திருச்சி செல்லும் ஆய்வுக் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்ய உள்ளனர். முன்னதாக, சேலம் வந்த காவிரி உயர்மட்டக் குழுவினரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

ஆய்வுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆய்வறிக்கை வரும் 17-ல் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close