[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ராம்குமார் பிரேத பரிசோதனை நாளை நடக்கிறது..எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் சென்னை வருகிறார்

tomorrow-ramkumar-postmortem-on-behalf-of-aiims-dr-sudhir-appointment

சுவாதி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை நாளை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடக்கவுள்ளது.

சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மரணமடைந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து சந்தேகம் எழுந்த சுவாதியின் தந்தை பரமசிவம் ராம் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்தில் தங்கள் தரப்பில் தனியார் மருத்துவர் ஒருவரை நியமனம் செய்யுமாறு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி கிருபாகரன் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை நியமிக்க உத்தரவிட்டார். இதில் திருப்தி அளிக்காததை அடுத்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த மனுவை உச்ச நீதிமன்ற‌ம், இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்‌டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் கே.குப்தா முன்னிலையில் ராம்குமாரின் பிரேதப்பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close