[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

ரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் போஸ் கொடுத்த ரசிகர்!

a-fan-walks-up-to-ricky-ponting-and-mel-mclaughlin-asking-for-a-picture

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் ரசிகர் ஒருவர் போஸ் கொடுத்த சம்பவம் அடிலெய்டு மைதானத்தில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் மெக்லாப்லின் ஆகியோர் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் தொகுப்பாளினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார். இந்த விருப்பத்தை அந்த ரசிகர் ரிக்கி பாண்டிங்கிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர் தொகுப்பாளியுடன் போஸ் கொடுக்க அதை ரிக்கி பாண்டிங் புகைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை மெக்லாப்லின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிக்கலாமே: பாஜகவில் இணைந்தார் நமீதா!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close