[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

சச்சின் சாதனையை முறியடித்த இளம் வீராங்கனை ஷஃபாலி

shafali-verma-surpasses-sachin-tendulkar-to-become-youngest-indian-to-score-international-fifty

சின்னஞ்சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா , ஜாம்பவான் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார்‌. குறைந்த வயதில் அரை சதம் அடித்த அந்த வீராங்கனையின் கிரிக்கெட் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

Image result for shafali verma

கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் களம் இறங்கி‌யபோது, மைதானத்தில் இருந்து சச்சின். சச்சின் என முழக்கமிட்ட பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் ஒருவர் ஷஃபாலி வர்மா. சச்சின் தனது கடைசி ரஞ்சி போட்டியை ஹரியானாவில் 2013ஆம் ஆண்டு விளையாடியபோது, 9 வயது சிறுமியாக போட்டியை நேரில் பார்த்து ரசித்தார் ஷஃபாலி. அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், அடுத்த 6 ஆண்டுகளில் சச்சினின் சாதனையை முறியடிப்போம் என்று.

Image result for shafali verma

ஹரியானாவைச் சேர்ந்த 15 வயது இளம் நாயகி ஷஃபாலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசினார். இதன் மூலம்‌ சர்வதேச கிரிக்கெட்டில், குறைந்த வயதில் அரை சதம் அடித்த இந்தியர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். டெண்டுல்கர் 16 வயதில் அரை சதம் அடித்ததே இந்தியரின் சாதனையாக இருந்தது.

Image result for shafali verma

தனது 9 ஆவது வயதில், 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு பேட்டிங்கில் தன்னை பட்டை தீட்டினார். அதிரடி ஆட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சீனியர் பெண்கள் அணிக்கு தேர்வானார். தென்னாப்ரிக்காவுடனான 20 ஓவர் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை‌ தொடங்கிய ஷஃபாலி, இ‌ரண்டே மாதத்தில் புதிய‌ சாதனையை நி‌கழ்த்தி அனைவரது பார்வையையும் தன்பக்‌கம் ஈர்த்துள்ளார்‌. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close