[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

தீபக் சாஹர் அசத்தல்: டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

india-beats-ban-in-3rd-t20-to-seal-the-series

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. 

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர்(62), கே.எல் ராகுல்(52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி சார்பில் சஃபியூல் இஸ்லாம் மற்றும் சவுமியா சர்கார் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 9 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த சவுமியா சர்கார் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார். பின்னர் வந்த முகமது மிதுன்,  நையிம் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பங்களாதேஷ் அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினர். 10 ஓவர்களின் முடிவில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. 

முகமது மிதுன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த முஸ்ஃபிகூர் ரஹிம் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த நையிம் டி20 போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இவர் 48 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளின் உதவியுடன் 81 ரன்கள் எடுத்து சிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து வந்த அஃபிஃப் ஹோசைன் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார். சிறப்பாக பந்துவீசிய சிவம் துபே 16ஆவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 144  ரன்கள் எடுத்து  30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.  இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். சிவம் துபே 3 விக்கெட்களை சாய்த்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close