[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

3 வது டி-20: கிராண்ட்ஹோம் அதிரடியால் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசி!

new-zealand-wins-third-t20i-leads-series-2-1-against-england

இங்கிலாந்துடன் இன்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையே முதல் டி-20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி வெலிங்கடனில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி, நெல்சனில் இன்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கிராண்ட்ஹோம் 35 பந்துகளில் 55 ரன்களும் குப்தில் 33 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.  இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மலன் 55 ரன்களும் வின்ஸ் 49 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பெர்குசான், டிக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் சோதி, சட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது நியூசிலாந்து அணி. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close