இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.
இதற்காக, இரு அணி வீரர்களும் கடந்த சில நாட்களாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கும். இந்தப் போட்டியிலும் வென்று தென்னாப்பிரிக் காவை வொயிட் வாஷ் செய்ய இந்திய அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. அதனால் இன்றைய போட்டியில் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.
ராஞ்சி மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான் நடந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-ஆஸ்திரே லியா இடையிலான அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்த மைதானம் முதல் 3 நாட்களுக்கு பேட்டிங்குக்கு சாதகமாவும், பிறகு சுழற்பந்து வீச்சுக்கும் உகந்த வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?