[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

வீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை விமர்சிப்பதா? சானியா மிர்சா

sania-mirza-roots-for-accompanying-cricketers-wags-on-team-tours

வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அவர் மனைவியையோ, காதலியையோ விமர்சிப்பது முட்டாள்தனமானது என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

மும்பையில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட சானியா மிர்சா, இதைத் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நமது கிரிக்கெட் அணி உள்பட பல விளையாட்டு அணி, வெளிநாடு செல்லும் போது வீர்ர்களுடன் அவர்களது மனைவியையோ, காதலியையோ அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை. அப்படி அழைத்து சென்றால் வீரர்களின் கவனம் சிதறிவிடுமாம். அப்படியென்றால் பெண்கள் தான், ஆண்களின் கவனத்தை சிதறச் செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? வீரர்களின் ஊக்கம், பலமாக பெண்களைக் கருதாமல், ஏன் பிரச்னையாக பார்க்கி றார்கள். மனைவியோ, காதலியோ அருகில் இருக்கும் போது, விளையாடி விட்டு திரும்பும் வீரர்களுக்கு எவ்வளவு மகிழ்ச் சியாக, உத்வேகமாக இருக்கும் என்பதை பாருங்கள்.

அதே நேரம் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அவர் மனைவியையோ, காதலியை விமர்சிப்பது முறையற்றது. விராத் கோலி சரியாக விளையாடத போது,
அனுஷ்காவை விமர்சித்தது முட்டாள்தனமானது’ என்றார்.

மேலும் சானியா கூறுகையில், ‘நான் சின்ன வயதில் டென்னிஸ் விளையாடிய போது என் உறவினர்கள், நீ வெயிலில் விளை யாடினால், உடல் கறுத்து போய் விடும். உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள், டென்னிசை விட்டு விடு என்று பயமுறுத்தினார்கள். இப்படி பேசுவதை நிறுத்தி விட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் பெண்களை சிறுவயதி லிருந்தே ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close