[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

யூரோ கோப்பை.... பெல்ஜியத்தை விழ்த்தியது வேல்ஸ்

euro-cup-football-wales-vs-beljium

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பெல்ஜியம் ‌அணியை வீழ்த்தி வேல்ஸ் அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரான்சின் லில்லி நகரில் நடந்த காலிறுதிப் போட்டியில், 13ஆவது‌ நிமிடத்தில் பெல்ஜி‌யம் வீரர் கோல் அடித்து‌ தமது அணியை முன்னிலை பெறச் செய்தார். 31ஆவது நிமிடத்தில் வேல்ஸ் அணி பதில் கோல் அடித்து சமன் செய்தது. முதல் பாதியில் ‌இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால், இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.

55ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் தற்காப்பு‌ ஆட்டத்தை தகர்த்து, அசத்தலாக கோல் அடித்தார் வேல்ஸ் அணியின் ராப்சன் கனு. ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்தபோது, வேல்ஸ் அணிக்கான மூன்றாவது கோலை சாம் வோக்ஸ் பதிவு செய்தார். பெல்ஜியம் அணியால் மேற்கொண்டு கோல்எதுவும் அடிக்க இயலவில்லை.

இதனால் வேல்ஸ் அணி மூன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, யூரோ‌ கோப்பை கால்பந்து தொடரில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. புதன்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து வேல்ஸ் அணி விளையாடவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close