[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: கோலி, ரஹானே அரை சதம்!

virat-kohli-ajinkya-rahane-hit-fifties-to-put-india-in-firm-control

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் கோலி, ரஹானே ஆகியோர் அரை சதம் விளாசியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக் கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரஹானே 81 ரன்களும் ஜடேஜா 58 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் சேஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அதிகப்பட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹோல்டர் 10 ரன்களுடனும் கம்மின்ஸ் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.

3 ஆம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஹோல்டர் 39 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. மயங்க் அகர்வால் 16 ரன்களிலும் கே.எல்.ராகுல் 38 ரன்களி லும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் இணைந்து நிதானமாக ஆடி அரைசதம் அடித் தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 51 ரன்களுடனும் ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close