[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இன்று 3வது டி20 போட்டி : வெஸ்ட் இண்டீஸை வாஷ் அவுட் செய்யுமா இந்தியா ?

india-vs-west-indies-3rd-t20

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், இப்போது நடந்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் மூத்த வீரர்கள் சிலருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளை பொறுத்தமட்டில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது. அதேசமயம் தொடரை வாஸ் அவுட் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது.

கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close