[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் அதிரடி சதம், 284 ரன்னுக்கு ஆஸி.ஆல் அவுட்!

smith-s-century-rescues-australia-on-first-day-of-ashes

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 284 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஸ்டீவன் ஸ்மித் அபார சதமடித்தார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற் கிறது. பாரம்பரியமிக்க இந்த தொடரில் முதலாவது டெஸ்ட், பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியின் முடிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 284 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தனியாக போராடினார். இதன் பலனாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 24 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 144 ரன்களை எடுத்து ஸ்மித் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

பந்தை சேதப்படுத்திய புகாரில் தடை விதிக்கப்பட்டிருந்த ஸ்மித், அதற்கு பின் ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்துள் ளது குறிப்பிடத்தக்கது. சிடில் 44 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close