[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

“தோனிக்கு உடனே ஓய்வு பெறும் திட்டமில்லை” - தோனியின் நீண்ட நாள் நண்பர்

ms-dhoni-has-no-immediate-plans-to-retire-says-longtime-friend-arun-pandey

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டமில்லை என அவரது நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் இறுதிவரை போராடிய தோனி, ரன் அவுட் ஆகியதால் அணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை. அன்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர். மேலும் இந்த உலகக் கோப்பை தொடருடன் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. பலரும் தோனி ஓய்வு குறித்த கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

அண்மையில் நடத்தப்பட இருந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான இந்திய அணி தேர்வை பிசிசிஐ தள்ளி வைத்தது. அதில் தோனிக்கு வாய்ப்பிருக்காது எனவும் கூறப்பட்டது. மூத்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் கூட தோனி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவரது நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே கூறியுள்ளார். அத்துடன் ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்து இவ்வாறு (ஓய்வு) என குறிப்பிட்டு கருத்து கூறுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close