[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

இந்தியா- நியூசி. மோதல்: சாதனைக்கு காத்திருக்கிறார் ’தல’!

ms-dhoni-certain-to-script-history-with-huge-world-record-in-sight

உலகக் கோப்பையில் இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் சத்தம் போடாமல் சாதனை படைக்க இருக்கிறார், ’தல’ தோனி!

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின் றன. இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடக்கிறது. இன்றைய போட்டியில் சத்தம் போடாமல் சாதனைக்கு காத்திருக்கிறார் தோனி. அவர் இதுவரை 349 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்று நடக்க இருப்பது அவருக்கு 350 வது போட்டி. 

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு 350 போட்டிகளில் விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் தோனி. அதோடு சர்வதேச அள வில் 350 போட்டிகளில் விளையாடும் 10 வது வீரராக இடம்பெறுகிறார் தோனி. அவருக்கு முன், சச்சின் (463), ஜெயவர்த்தனே (448), சனத் ஜெயசூர்யா (445), சங்ககாரா (404), அப்ரிதி (398), இன்சமாம் உல் ஹக் (378), ரிக்கி பாண்டிங் (375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350) ஆகியோர் இருக்கிறார்கள். 

350 போட்டிகளில் பங்கேற்ற முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி இன்று படைக்கிறார். இலங்கையின் சங்ககாரா, இவரை விட அதிகமான போட்டிகளில் விளையாடி இருந்தாலும் விக்கெட் கீப்பராக மட்டும் அவர் பங்கேற்க வில்லை. பல போட்டிகளில், பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. 

தோனி, விளையாடியுள்ள 349 போட்டிகளில் 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close