[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சாதனைகளைப் பற்றி யோசிப்பதில்லை: ரோகித் சர்மா

malinga-has-been-a-champion-bowler-for-sri-lanka-rohit-sharma

சாதனைகளை பற்றி யோசிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த‌‌ போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் சேர்த்தது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்னும் லஹிரு திரிமன்னே 53 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 103 ரன்னும் கே.எல்.ராகுல் 111 ரன்னும் எடுத்தனர். நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம், உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ரோகித் சர்மா புரிந்தார். 

ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின் அவர் பேசும்போது, ’’இந்தச் சாதனைகளை நினைத்ததில்லை. வழக்கம்போல மைதானத்துக்குச் சென்று ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நன்றாக விளையாடினால், இதெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஆடும்போது, ’ஷாட்’களை தேர்வு செய்வது முக்கியம். அதை எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அடிக்கக் கூடிய ஷாட் களை மட்டுமே தேர்வு செய்து ஆடினேன். முந்தைய தவறுகளில் இருந்து கற்ற பாடம் இது. கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். ஒவ்வொரு போட்டியையும் புதிதாகவே பார்க்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி இருப்பவர்கள், சதத்தை பற்றி யே பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

இலங்கை வீரர் லசித் மலிங்கா பற்றி கேட்கிறீர்கள். அவர் இலங்கைக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் சாம்பியன் பந்துவீச் சாளராக இருந்திருக்கிறார். அவர் சிறந்த மேட்ச் வின்னர். அவருக்கும் எனக்கும் சிறப்பான நட்பு இருக்கிறது. நெருக்கமாகப் பார்த்திருப்பதால் சொல்கிறேன், அவரை கிரிக்கெட் உலகம் நிச்சயம் இழக்கும்’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close