[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

தோனி சாதனையை இன்று முறியடிப்பாரா ரோகித்?

rohit-sharma-2-big-hits-away-from-breaking-dhoni-s-odi-record

உலக கோப்பைத் தொடரில் இன்று நடக்கும்போட்டியில், தோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று தெரிகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அபார சதமடித்தார். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடந்த போட்டியில் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றி னார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸை இன்று எதிர்கொள்கிறது. 

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, தோனியின் சிக்சர் சாதனையை முறியடிப்பார் என்று தெரிகிறது. ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருக்கிறார். அவர், 345 போட்டிகளில் 225 சிக்சர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 210 போட்டிகளில் 224 சிக்சர்களை விளாசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீசை இன்று சந்திக்கிறது ’டீம் இந்தியா’: விளாசுவாரா தோனி?   

இன்றைய போட்டியில் அவர் மேலும் 2 சிக்சர்கள் அடித்தால் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். சர்வதேச அளவில் 4 இடத்தை பெறுவார். 

அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில், பாகிஸ்தானின் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதி (351) முதலிடத்திலும் வெஸ்ட் இண் டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 324 சிக்சர்கள் விளாசி இரண்டாம் இடத்திலும், இலங்கையின் ஜெயசூர்யா (270) மூன்றாவது இடத் திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, (ஒருநாள், டி20, டெஸ்ட்) சர்வதேச போட்டிகளில் தோனி அடித்த சிக்சர்களை (355), ரோகித் சர்மா ஏற்கன வே முறியடித்துவிட்டார். ரோகித் 358 சிக்சர்களை விளாசியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close