[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கால்பந்து மன்னன் மெஸ்ஸியின் பிறந்தநாள் இன்று !

happy-32nd-birthday-to-lionel-messi

நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இன்று தனது 32 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கால்பந்து உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரும் அவர், இன்றும் இளம் ‌வீரருக்கான துடிப்புடன்தான் விளையாடி வருகிறார்.

சக்கரம் கட்டியது போல் கால்களில் வேகம், பந்தைக் கடத்திச் செல்வதில் எதிரணியை திகைக்க வைக்கும் லாவகம் என கால்பந்தாட்டத்தின் ஆகச் சிறந்த வீரராகத் திகழ்பவர் அர்ஜென்டிணாவின் மெஸ்ஸி. கால்பந்தாட்டத்தில் பல்வேறு சாதனைகளைக் குவித்துள்ள மெஸ்ஸிக்கு சர்வதேச அரங்கில் மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. மெஸ்ஸியின் காலுக்கு பந்து சென்றுவிட்டாலே ரசிகர்களின் ஆரவாரக் குரல் விண்ணை முட்டும். எதிரணியினர் எவ்வளவு பேர் சூழ்ந்து கொண்டாலும் பந்தை இலக்கை நோக்கி கடத்திச் செல்வதில் கெட்டிக்காரர்.

தேசிய அணியான அர்ஜென்டினாவிற்கும், கிளப் அணியான பார்சிலோனாவிற்கும் அதிக கோல் அடித்தவர், ஐரோப்பிய கோல்டன் ஷு விருதை அதிகமுறை வென்றவர், சாம்பியன்ஸ் லீக்கில் ஒரே போட்டியில் 5 கோல்களை அடித்த முதல் வீரர் என இவர் பெற்ற விருதுகளையும், சாதனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். கால்பந்தாட்டத்தில் மிக உயரிய பாலோன்- டி-ஆர் விருதை 2009 முதல் 2012 வரை தொடர்ந்து நான்கு முறை வென்று கால்பந்து ரசிகர்களையும், வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

கால்பந்து அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக ஜொலித்து வரும் மெஸ்ஸியால் இது வரை உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மட்டும் தீரா தாகமாக உள்ளது. இன்று தனது 32 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மெஸ்ஸிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close