[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் 

england-won-the-toss-and-elects-to-bat-first-against-afghanistan

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மேன்செஸ்டர் நகரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்றுமோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக ஜேசன் ராய் இல்லை. அவருக்குப் பதிலாக வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் மொயின் அலியும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 


 
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, நடப்புத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி, வெற்றிக் கணக்கை தொடங்காமல் கடைசி இ‌டத்தில் இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒருமுறை மட்டுமே நேருக்குநேர் சந்தித்துள்ளன. 2015ஆம் ஆண்டு நடந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close