[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

உலகக் கோப்பையில் 16 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இந்தியா-நியூஸிலாந்து

india-haven-t-faced-new-zealand-in-world-cup-since-2003-edition

உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் மோதுகின்றன.

உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. 

மழை ஒருபுறம் இருக்க, இந்தியாவும் நியூஸிலாந்தும் 16 வருடங்களுக்குப் பின்னர் தற்போதுதான் மோதுகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துடன் களம் கண்டது. அப்போது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடந்த 2007, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒருமுறை கூட மோதிக்கொள்ளவில்லை. 

ஏனென்றால் ‘ஏ’ டீம், ‘பி’ டீம் எனக் குழுக்கள் பிரிக்கப்பட்டு விளையாடிதால் இரண்டில் ஒரு அணி வெளியேறிவிடும். இதனால் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை உலகக் கோப்பையில் மொத்தம் 7 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close